
யாழில் உள்ள இராணுவ முகாம்களிலிருந்து விடுமுறையில் சென்ற சிறிலங்காவின் முப்படையினரையும் யாழ்.மாவட்டத்திற்கு அழைத்துவருவதற் கு இ.போ.ச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதற்காக பயன்படுத்தப்பட்ட இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் 31 பேர் தற் போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இராணுவ வாகனங்கள் உள்ளபோதும் இ.போ.ச வாகனங்களை பயன்படுத்தி இவர்கள் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டிருக்கின்ற னர். இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணத்திலுள்ள 16 பேருந்துகள் முப்படையினரையும் ஏற்றி வரப் பயன்ப டுத்தப்பட்டன. அவற்றின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 31 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இதனை வடபிராந்திய முகாமையாளர் அமீன் உறுதிப்படுத்தியிருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை. முப்படையினரின் சகல விடுமுறைகளையும் நிறுத்து வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. அவர்கள் உடனடியாக முகாம்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக திங்கட்கிழமை ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விடு முறையில் சென்ற பாதுகாப்புத் தரப்பினர் முகாம்களுக்கு அனுமதிக்கப்பட முன்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முப்படையினரையும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துச் சாலைகளையும் சேர்ந்த 16 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களை அழைத்து வருவதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் சாரதிகளும், நடத்துனர்களுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படையினரை அழைத்து வந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வீடுகளுக்குத் திரும்பிய நிலையில் அயலில் உள்ளவர்களால் அது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாரதிகளையும், நடத்துனர்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.