கடற்படையினருக்கு ஏற்பட்ட தொற்று: திணறும் சிறிலங்கா

இலங்கையில் கொத்தணி முறையில் கொரோனா வைரஸ் பரவுதல் அல்லது பரவாதிருத்தல் தொடர்பில் தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடற்படையினரில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர்களின் குடும்பத்தினர். பிரதேசவாசிகள் எதிர்காலத்தில் தொற்றுக்குள்ளாகக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் தொடர்பில் சுகாதார சேவை மற்றும் புலனாய்வுப்பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் கொத்தணி முறையில் தீவிரமாகப் பரவலடையாது என்று எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு கடற்படையினரில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன. தொற்றுக்குள்ளானோருடன் தொடர்பினைப் பேணியவர்களை தனிமைப்படுத்து வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், கொத்தணி முறையில் பரவுதல் குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் அமைச்சினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதே வைரஸ் கட்டுப்படுத்தலுக்கான சிறந்த முறைமையாகும். என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com