இலங்கையில் 500ஐ அண்மித்தது கொவிட் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரையில் 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,948 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.