பிள்ளைகளை வெட்டி கொன்ற தந்தை கைது!

கடந்த 26ம் திகதி பிரித்தானியா – கிழக்கு லண்டனில் உள்ள ஐல்போர்டில் ஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ் ஐல்போர்டில் வாழ்ந்துவந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, பவினியா என்ற ஒரு வயது மகள் மற்றும் நிகிஸ் என்ற மூன்று வயது மகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதுடன் தந்தையும் கத்திகுத்து காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொலை, தற்கொலை முயற்சி என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அந்நாட்டு புலனாய்வு பிரிவினர் நேற்று முன் தினம் (29) கொலை தொடர்பில் 40 வயதான குழந்தைகளின் தந்தையை கைது செய்துள்ளனர்.

கொரோனா காரணமாக குறித்த பகுதி முடக்கப்பட்ட (லொக்டவுன்) நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முடக்கம் காரணமாக பலரும் மன நல பாதிக்குக்கு உள்ளாகி அது தொடர்பான பிரிவுக்கு அழைப்பெடுப்பதாக தொடர்புடைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com