தோண்டிய இடத்தில் சிசுவின் எச்சம் இல்லை; வைத்திய அறிக்கை பெற உத்தரவு!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று நீதிமன்றில் முன்வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா நேற்று (30) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பெண்ணை மே 4ம் திகதி வரையும் அவருடன் தொடர்பிலிருந்த இளைஞனை 11ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

இதேவேளை சட்டத்துக்குப் புறம்பாக அகற்றப்பட்ட சிசு விடுதியின் முற்றத்தில் புதைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட நிலையில் பொலிஸாரால் அடையாளம் காட்டப்பட்ட இடம் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் தோண்டப்பட்டது. எனினும் குறித்த இடத்தில் சிசுவின் எச்சங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com