வீடு புகுந்து வாள் வெட்டு; ஈபிடிபி உறுப்பினரும் மனைவியும் படுகாயம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இன்று (29) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்குள் இன்றிரவு 7.15 மணியளவில் நுழைந்த மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகனும், அவரது மனைவியும் காயமடைந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பிரதேச சபை உறுப்பினர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரும் சிறுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.