கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எபோலா மருந்தின் சாதகமான முடிவு!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்து சாதகமான தரவுகளை தந்துள்ளதாக அதன் தயாரிப்பாளரான கிலியட் சயின்சஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக முதலில் உருவாக்கப்பட்ட மருந்தை கொரோனா வைரஸால் கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களில் பரிசோதனை செய்யப்பட்டது, அந்த பரிசோதனையின் முடிவுகளை இந்த வாரம் கிலியட் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

397 நோயாளிகளில் பாதி பேர், கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தனர், ஆனால் வென்டிலேட்டர்ககள் தேவைப்படும் அளவுக்கு நோய்வாய் படாதவர்கள் ஐந்து நாள் சிகிச்சைக்குப்பின் 10 நாட்களுக்குள் குணமடைந்தார்கள் மற்றும் 10 நாள் முறையில் மருந்தை பெற்றவர்கள் பதினொன்றாம் நாளில் குணமடைந்தனர்.

சொந்தமாக சுவாசிக்க முடியாத நோயாளிகளுக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராட மருந்து உதவும் என்று கூறுகிறது, ஆனால் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை

2 வாரங்களுக்குள் அரைவாசிக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கிலியட் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com