எடப்பாடியுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி!

நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் சுமார் 10 நிமிடங்கள் தனியாக பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.4,486 கோடி செலவில் நிறைவுற்ற பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்று பேசினர். பின்னர் பிரதமர் மோடி பேசினார்.

விழா முடிவில் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன்பின்னர், நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் சுமார் 10 நிமிடங்கள் தனியாக பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் உடனான முதல்வரின் ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.