
மருத்துவமனைகளை விட அதிகமான மக்கள் வீடுகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று இப்போது நம்பப்படுகிறது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மொத்தமாக 26,097 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன.
மிகவும் துல்லியமான புள்ளி விவரங்களின் அடிப்படையில் உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாக இருப்பதாக என்ஹெச்எஸ் இங்கிலாந்து அறிவித்துள்ளது.
கொரோனாதொற்று காரணமாக மருத்துவமனைகள் மற்றும் மூதாளர் இல்லங்களில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்தஎண்ணிக்கை இன்று மாலை வெளியானது.
இதில் இன்று வெளியான மொத்த தொகையை விட 3,811 மரணங்கள் இணைக்கப்பட்டு மொத்தமாக 26,097 பேர் மரணங்கள் அறிவிக்கபட்டுள்ளன.
பிரித்தானியாவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்த தரவுகளின் அடிப்படையில் ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்தபடியாக பிரித்தானியா அதிகூடிய கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த நாடாக பதிவுபெற்றுள்ளது.