சொந்த கிராமத்தை மேம்படுத்த பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராம பஞ்சாயத்து தலைவரான பெண் என்ஜினீயர்

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். ஆனால் தனது சொந்த கிராமத்தில் சமூக பணிகளை செய்யவும், தனது கிராமத்தை மேம்படுத்தவும் அவர் விரும்பினார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா சோக்கி கிராமம் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு சுவாதி திப்பேசாமி என்பவர் உறுப்பினராக தேர்வானார். பா.ஜனதா ஆதரவாளரான இவர் தற்போது இந்த கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வாகி இருக்கிறார்.

இவர் தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ. பட்டம் பெற்றுள்ளார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். ஆனால் தனது சொந்த கிராமத்தில் சமூக பணிகளை செய்யவும், தனது கிராமத்தை மேம்படுத்தவும் அவர் விரும்பினார்.

இதனால் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பினார். பெங்களூருவில் வசித்து வந்த சுவாதி திப்பேசாமி தனது கிராம மக்களுக்கு சேவையாற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வாகி, கிராம மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். தனது சொந்த கிராம வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவாதி திப்பேசாமியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.