
யாழ்.திருநெல்வேலி- மணல்தறை பகுதியில் மூதாட்டியின் சங்கிலியை அறுக்க சென்றவர்கள் மீது மூதாட்டி தாக்குதல் நடாத்திய நிலையில், அறுத்த சங்கிலியை கைவிட்டு திருடர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர்.
மணல்தறை வீதியில் பயணித்த 78வயது மூதாட்டி ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வீதியின் திருப்பத்திற்கு அண்மையில் வைத்து சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளனர்.
திடீரென இடம்பெற்ற சம்பவத்தை எதிர்பார்க்காதபோதும் குறித்த மூதாட்டி மிக வேகமாக அறுக்கப்பட்ட 2 பவுன் சங்கிலியை ஒரு கரத்தால் பற்றுயவாறு தனது கையில் இருந்த குடையினால் இளைஞனை தாக்கியதோடு அவலக் குரலும் எழுப்பினார்.
இதன்போது மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியை அபகரிக்க இளைஞனில் ஒருவர் முயன்றபோதும் தோல்வியடைந்த நிலையில் அயலவர்கள் வரும் சத்தம் கேட்டு தப்பியோடிவிட்டனர்.
இதன் காரணமாக சங்கிலி அறுந்தபோதிலும் கள்ளரிடம் இருந்து மூதாட்டியினால் காப்பாற்றப்பட்டது