சிறிலங்கா கடற்படையினரை சேதமாக்கும் கொரொனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 226 கடற்படையினர் தொற்றுக்குள்ளா கியிருப்பதாக சுகாதார அமைச்சு தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் அனைவரும் வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றுபவர்கள். வெலிசறை கடற்படை முகாமில் கடமையின்போது 147 கடற்படையினருக்கும் விடுப்பில் உள்ள 79 கடற்படையினரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட 31 பேரில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 21 சிப்பாய்கள் அடங்குகின்றனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com