இது பாம்பா மீனா? பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்திய அரிய காட்சி!

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு மீன் ஒன்று ஈல் என்னும் விலாங்கு மீனை வேட்டையாடி கொண்டிருக்கிறது. அப்போது விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருப்பதால், விலாங்கு மீனை விழுங்க முடியாமல் அந்த மீன் மீண்டும் அதனை வெளியே கக்கியது. வெளியே வந்த விலாங்கு மீனும் தன் உயிர்வந்த நிலையில் அங்கிருந்து ஓடியது.

இதனை பதிவிட்ட சுசாண்ட நந்தா என்னும் ஐ.எப்.எஸ் அதிகாரி ‘இயற்கையின் அற்புதமான தருணங்கள்’ எனப்பதிவிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் பார்வையாளர்கள் இது பாம்பா? மீனா? என்றே தெரியவில்லை, இப்படியொரு மீன் இருக்கின்றதா எனவும் இந்த காட்சி அற்புதமாக இருக்கின்றது என கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.