ஐஸ் போதைப்பொருள் கடத்தியவர் கைது

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை(28) மாலை சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை கண்ட விசேட அதிரடிப்படையினர் 30 வயதான ஒருவரை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வாறு இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மே 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com