வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!

வவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்றய தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு சென்று படித்து விட்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பமையால் அவரை காணவில்லை என ஓமந்தை காவல் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த சிறுவனின் புத்தகப்பை சக மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒமந்தை காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சிறுவன் குறித்த பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.