
இலங்கையில் கொரோனோ வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றதால் கொழும்பு ஐ.டி.எச். வை்த்தியசாலையில் நோயாளர்களுக்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்ற கொரோனோ தாக்கம் இலங்கையிலும் அண்மைய நாட்களாக வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் நுாற்றுக் கணக்கான தொற்றாளர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றவர்களின் 140 நோயாளர்கள் தற்பொது அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அதிகபட்சமாக அனுமதிக்க முடியுமாக இருந்த அத்தனை நோயாளர்களையும் வைத்தியசாலை உள்ளீர்ப்பு செய்ததினால் புதிய நோயாளர்களை அனுமதிக்க முடியாத நிலைமை வரலாம் என்று விசேட மருத்துவ நிபுணர் ஒருவர் குறிப்பிட்டிகின்றார்