நாட்டில் இன்று 704 பேருக்கு கொரோனா; ஏழு பேர் பலி!

இலங்கையில் கொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்கோன பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண்ணொருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். வேஉட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்ணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.ஹெட்டிப்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

பியகம பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

டிக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி உயிரிழந்துள்ளார். நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண்ணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனாவால் இதுவரை 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 704 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.