வவுனியா ஊடாக வடமாகாணத்தினுள் வருகைதருவோர் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்!!

கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவி இன்று (08.04.2020) மதியம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதியுதவில் மனிதனின் வெப்பத்தினை அளவிடும் இரு கருவிகள் வழங்கப்பட்டது.

இவ் இரு கருவினையும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் இணைந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவிடம் கையளித்தனர்.

நாளை தொடக்கம் வவுனியா மாவட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் ஈரற்பெரியகுளம் பகுதியில் குறித்த கருவியின் பரிசோதனையின் பின்னரே வவுனியா மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com