ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான தேசிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் இதுவரையான காலப் பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்த 23,217 நபர்கள் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி அளவை நேற்று பெற்றதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி 29 ஆம் திகதி முதல் நேற்று வரை 118,767 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.