
கடந்த 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டிற்கான வவுனியா மாவட்டம் தவிர்ந்த வடக்கிலுள்ள ஏனைய பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகியிருந்தது. எனினும் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதையடுத்து நகரிலுள்ள ஆறு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது.
எனினும் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து கடந்த 18 ஆம் திகதி வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இருந்தும் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களிடம் காணப்பட்ட கொரோனா அச்சம் காணமாக மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வழமைக்குத் திரும்பியதை அவதானிக்க முடிந்துள்ளதுடன், கொரோனா நடைமுறை பாதுகாப்புக்களுடன் பெற்றோர்கள் மாணவர்களைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றதை அவதானிக்கவும் முடிந்துள்ளது.
