பாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது

பாணந்துறை, பள்ளிமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரை கைதுசெய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுல்ல பகுதியில் அமைந்துள்ள சொகுசு வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மூவர் பயணித்த முச்சக்கரவண்டியின் மீது , மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் கண்டுக் கொள்ளமுடியாதவாறு முகத்தை மறைக்கும் வடிவிலான தலைக்கவசங்களை அணிந்திருந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு நபரை இலக்குவைத்தே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கெமுணுமாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மீனவர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சென்றிருந்ததுடன், பாணந்துறை வடக்கு பொலிஸாரும் சென்று விசாரணைகளை முன்னெடுத்த சமயம் சம்பவ இடத்திலிருந்து  4 ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.