
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோ இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடயம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ரோபோ நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. அதி வேகமாக தொற்றுநோய்களையும் கண்டறியும் திறன் கொண்டது என்பதே இதன் சிறப்பு அம்சம்
கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான பமுதிதா பிரேமச்சந்திராவினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ 200 நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. தொற்றுநோய்களின் போது பயன்படுத்துவதற்காக இந்த ரோபோவை மேலும் மேம்படுத்த அரசு பரிந்துரை செய்துள்ளது.

