அமெரிக்காவில் மீண்டும் ஒரே நாளில் 2,470 பேர் கொரோனாவிற்கு உயிரிழப்பு

அமெரிக்காவில் பெருந்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,470 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகம் முழுவதும் இதுவரை 31,36,507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 9,53,321 பேர் குணமடைந்துள்ளனர். 2,17,813 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை மொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது. உலகளவில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்காவே முதலிடத்திலுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில்  கொரோனாவால் உயிரிழப்பவர்களின்  எண்ணிக்கை குறைந்து வந்தது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. அதிலும் ஏப்ரல் 26ஆம் தேதி 1,157 பேர் , ஏப்ரல் 27ஆம் தேதி 1,384 பேர் என உயிரிழப்பு எண்ணிக்கை 1500க்கும் கீழ் குறைந்தது .

ஆனால் தற்போது மீண்டும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, இதுவரை அங்கு 10,35,765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,266 ஆக உள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com