
கொரோனா வைரஸை முற்றாக அழிக்க முடியாது என சீன விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சார்ஸ் வைரசுடன் ஒப்பிடும் போது கொரோனா வைரஸை ஒழிப்பது மிகவும் சிரமம் எனவும் அது காய்ச்சல் போன்ற பருவகால நோயாக மாறலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எவ்வித நோய் அறிகுறியும் இன்றி வைரஸ் காவிகள் இருப்பதே கொரோனா வைரஸை ஒழிப்பதில் காணப்படும் பிரதான சிரமம்.
இவர்களை ஆரோக்கியமாக இருப்பவர்களுடன் பிரித்து அடையாளம் காணமுடியாது இருப்பது இந்த நோய் காவிகள் வைரஸை பரப்புவதில் வழங்கும் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
சார்ஸ் வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கு பெரியளவில் நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலை தடுக்க முடிந்தது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படும் சீனாவில் தினமும் 10 முதல் 12 நோயாளிகள் இன்னும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் ஒரு பருவகால நோயாக மாறலாம் என அமெரிக்காவின் தொற்று நோய் தொடர்பான நிறுவனத்தின் பணிப்பாளர் Anthony Fauci இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
உலகில் உள்ள பெரும்பாலான அனைத்து நாடுகளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பின்னரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா வைரஸை முற்றாக ஒழிக்கும் சிரமம் குறித்து சீன விஞ்ஞானிகள் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.