
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிய ஹைட்ராமணிக் கைத்தொழில் பேட்டையில் பணிபுரிவதற்கா கண்டி,அம்பாறை மாவட்டங்களில் இருந்து வருகைதந்த 9 பேர் அவர்கள் தங்கியுள்ள வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள் கைத்தொழில் பேட்டையில் பணிசெய்வதற்கான மேலதிகாரிகள் உள்ளிட்ட 9பேர் கண்டி,அம்பாறை மாவட்டங்களில் இருந்து எதுவித பொதுசுகாதார பரிசோதகரின் அனுமதியும் இன்றி சிறப்ப பயண அனுமதியுடன் புதுக்குடியிருப்பிற்கு 28.04.2020 அன்று வந்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு சிவனநகர் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் கடந்த மார்ச் மாத்திற்கு முன்னர் இருந்து வாடகைக்கு இருந்து வந்துள்ளார்கள்.
ஊரடங்கு சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 22 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த நபர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு சென்றுள்ள நிலையில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் இவர்கள் வேலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நேற்று இரவு குறித்த வீட்டின் பகுதிக்கு முன்னால் பிரதேச இளைஞர்கள் குவிந்து நின்ற வேளை குறித்த நபர்களை வெளியேற்ற சொல்லி மக்கள் குவிந்து நின்றார்கள்.
இன்னிலையில் நேற்று இரவு ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 8.00 மணிக்கு பின்னரே பொலீசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து அங்கு குழுமியிருந்த பிரதேச மக்களை அடித்து கலைத்துள்ளார்கள்.
இன்னியில் மீண்டும் இன்று (29) காலை குறித்த பகுதிக்கு பிரதேச மக்கள் சென்று தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள வேளை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் கிராம அபிவிருத்தி சங்க தலைர் மற்றம் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுதன் இருவரை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
இருந்தும் பிரதேச மக்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதந்தவர்களை வேறு இடங்களுக்கு மாற்றி அவர்களை 14 நாட்கள் களித்த பின்னர் அவர்கள் மீது பரிசோதனை மேற்கொண்டு பின்னர் அவர்களை பணிக்கு எடுத்து கொள்ளுங்கள் அதுவரை மக்கள் செறிந்து வாழும் சிவனநகர் பகுதியில் இவர்களை தங்கவைக்கவேண்டாம் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளாhர்கள்.
இன்னிலையில் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்ற பொது சுகாதாரபரிசோதகர்கள் குறித்த வீட்டில் இருந்த 9 பேரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவித்து விட்டு குறித்த வீட்டில் இருப்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கான அறிவித்தலை வீட்டின் வாசலில் ஒட்டிவிட்டு சென்றுள்ளதுடன் இவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.