பிரித்தானியா பிரதமர் போரிஸ்-கேரி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு இன்று காலை லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான சைமண்ட்ஸ் இன்று லண்டனில் உள்ள N.H.S மருத்துவமனையில் ஒரு ‘ஆரோக்கியமான’ ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com