சுதந்திர தினத்திற்கு முன்னர் 500,000 கொரோனா தடுப்பூசி குப்பிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா முடிவு!

இந்தியாவின் சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரித்துள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்-எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 500,000 இலவச குப்பிகள் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஜனவரி 26, இந்திய குடியரசு தினத்தை குறிக்கும் வகையில் அடுத்த வார ஆரம்பத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், கடந்த வெள்ளிக்கிழமை அற்கான அனுமதியை வழங்கியது.

இந்தநிலையில் சீரம் நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு பில்லியன் தடுப்பூசி குப்பிகளை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஏனைய தடுப்பூசிகளின் உலகளாவிய தேவைகளில் 40 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.