
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் விசமிகளால் கரை வலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கரைவலை எரிவதை அவதானித்த அருகிலிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைத்த நிலையில் அரைவாசி வலை காப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.