
COVID-19 கிருமித்தொற்று காரணமாக உலகளாவிய பயணத்தின் சரிவைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள சூழலில், தேவைக்கதிகமான ஊழியர்கள் வேண்டாம் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்தது.
உலக அளவில் அதிகரித்து வரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால் பல நாடுகள் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதித்துள்ளன. அதனால் விமான நிறுவனங்கள் பெரிய பாதிப்பை அடைந்துள்ளன.
இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் 12ஆயிரம் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள விமானிகள், விமான நிலையப் பணியாளர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 12000 பேரை பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விமான நிறுவன பணியாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் சர்வதேச விமான சேவையை ரத்து செய்துள்ளதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.