கனடாவில் மசாஜ் தெரபி சிகிச்சை செய்ய சென்ற இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட 61 வயது முதியவர்!

கனடாவில் மசாஜ் தெரபி செய்யும் நபர் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த 3ஆம் திகதி ஸ்படினா சாலையில் உள்ள தனது வீட்டில் பெண்ணொருவர் மசாஜ் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு மசாஜ் தெரபி செய்த Rolando Arrango Larrinaga (61) என்ற நபர் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான புகாரின் பேரில் Rolando Arrango Larrinaga-ஐ கைது செய்துள்ளோம்.

அவரால் மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.

கைது செய்யப்பட்ட Rolando Arrango Larrinaga அடுத்த மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என கூறியுள்ளனர்.