பொலிஸாரின் சுற்றி வளைப்பில் தந்தையும் மகனும் கைது!

மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குஞ்சுகுளம் கிராமத்தில் இரண்டு சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) இரவு பத்து மணியளவில் மடு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த சட்ட விரோத உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 25 வயது மகனும் 50 வயதுடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மடு பொலிசாரின் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

குறித்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் மடு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிரோஷன் பி.எஸ்.செனவிரெத்ன ஜெயவர்த்தன திசநாயக்க விதுஷான் பிரியதர்சன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com