தனிமைப்படுத்தலை எதிர்க்கும் முல்லை மக்கள்

பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் மக்களில் சிலர் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்தினரை கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம், விஸ்சுவமடு பாரதி வித்தியாலயம், இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கூழாமுறிப்பு பாடசாலை, தண்டுவான் அ.த.க. பாடசாலை உள்ளிட்டவை காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்று முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையில் தளபாடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்களின் ஆவணங்கள் அடங்கிய அலுமாரி இராணுவத்தால் எடுத்துச்செல்லப்பட்டு அயலில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலைக்கு முன்பாகக் கூடிய பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, இப்பாடசாலைக்கு அண்மையில் உள்ள பாடசாலையான வலதுகரை மகாவித்தியாலயத்தில் கூடிய பெற்றோர் சிலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com