அடைமழையிலும் மாட்டின் மேல் பொலித்தீன் பை சுற்றி மேய்ச்சலுக்கு விட்ட யாழ் நபர்!

யாழில் கடந்த இரு தினங்களாக இடைவிடாத தொடர் அடைமழையினால் தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடை மழைக்காலங்களில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருக்கும் கால்நடைகளை பார்த்து நம்மில் பலருக்கு இரக்கம் ஏற்படுவதுண்டு. அடைமழைக்குள்ளும் கால்நடைகள் கட்டப்பட்டிருப்பதை நினைத்து, கால்நடை உரிமையாளர்களை மனதிற்குள் திட்டுவதுண்டு.

யாழப்பாணத்தின் ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட படம் இது. அடைமழைக்குள் மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாட்டு கன்று ஒன்றுக்கு பொலித்தீன் பை சுற்றப்பட்டுள்ளது.