பன்றிக்கு வலை வைத்தவர் பரிதாபமாக பலி!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ மேற்பிரிவு தோட்டத்தில் இன்றையதினம் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி தனது வீட்டுத் தோட்டத்தில் பன்றிக்கு வலை வைப்பதற்கு முயற்சித்த நிலையில் இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.