மன்னார் முருங்கன் இளைஞனின் தற்கொலைக்கான பின்னணியில் பொலிஸார்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்

மன்னாரில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார், முருங்கன் பிட்டியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க நிஷாந்தன் எனும் இளைஞர் தூக்கில் தொங்கியபடி நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாமென்ற அடிப்படையில் அவரின் நண்பர்கள் சில தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

அதில் குறிப்பாக அவருக்கு மனைவியுடன் முரண்பாடுகளிருந்ததாகவும், அது தொடர்பாக அவரது மனைவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடுகள் கொடுத்த போதெல்லாம், யாரின் பக்கம் சரி, யாரின் பக்கம் பிழையென்று பார்க்காமல் குறித்த இளைஞரை பொலிஸார் மிரட்டியதுடன், அவரை தாக்கியும் உள்ளனராம்.

ஆனால் உண்மையில், குறித்த இளைஞனின் மனைவி உண்மையான தகவல்களை முறைப்பாடுகளாக, கொடுக்கவில்லையென்றும், தன்னை பற்றி தவறாக கொடுத்து வருவதாகவும், அது பொலிசாருக்கு புரியாமல் தன்னை துன்புறுத்துவதாகவும் தற்கொலை செய்துகொண்ட இளைஞன் சில தினங்களுக்கு முன் அவரது நண்பர்களுக்கு கூறியதாக அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.