சக்கர நாற்காலியில் இருத்திய இன அழிப்புப் போர்: சாதித்து காட்டிய மாணவிகள்

நடந்தது முடிந்த 2019 கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை மாணவிகள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

இதில் உயிரிழை அமைப்பின் பயனாளிகள் பிள்ளைகள் 8 பேர் சித்தியடைந்துள்ளனர்.

இதில் விஷேசமாக எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகள் இருவர் தங்களது சக்கர நாற்காலிகளுடன் சென்று தங்களது கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதனை நிருபித்துள்ளனர்.

1.தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து தனது வாழ்க்கையை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருபவர்.

2.நாவலர் வீதி முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த மதியழகன் விதுர்சிகா இவர் கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தில் தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து இன்று வரை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது கல்வியை இடையில் விட்டுவிடாது தொடர்ந்து படித்து க.பொ.த. சாதாரண தரத்தில் மிகவும் சிறப்பாக சித்தியடைந்துள்ளனர்.

K.பவதாரணி- 8A,B,

M.விதுர்ஷிகா- 6A,B,2C

ஆகியோர் சிறந்த சித்திகளை பெற்றுள்ளானர்.இவர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

விசேடமாக Lebara Foundation (LBR Foundation) தொடர்ந்தும் உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கான கல்வி வளர்ச்சியில் முழுக்கவனம் எடுத்து இன்றுவரைக்கும் கல்வி செயற்திட்டத்திற்காக அர்ப்பணிப்போடு செயல்ப்பட்டு வருகின்றனர். இதேவேளை குறித்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

மதியழகன் விதுர்சிகா முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பொது தரா தர சாதாரணதர பரீட்சையில் 6 பாடங்களில் A தர சித்தி 2 C தர சித்தி B தர சித்திகள் அடங்கலாக சாதித்திருக்கிறார் .

ஒரு நாளின் அதிக மணித்தியாலங்கள் சக்கர நாற்காலியிலேயே இருக்கும் விதுர்சிகாவுக்கு இடுப்புக்கு கீழான பகுதியில் உணர்வுகள் இல்லை 2009 ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளின் பூரண கட்டு பாட்டில் இருந்த செட்டிகுளம் ஆனந்தகுமாரசுவாமி திறந்த வெளி சிறையான இடைத்தங்கல் முகாமில் வைத்து மக்களை அச்சுறுத்தி அடக்கி வைக்க மக்களை நோக்கி படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒரு துப்பாக்கி சன்னம் இவரின் இடுப்பை துளைத்து சென்று அருகிலிருந்த அண்ணனின் கையிலும் பாய்ந்தது .

தனது ஆறாவது வயதில் இயங்க முடியாது முடங்கி போன விதுர்சிகாவுக்கு சக்கர நாற்காலியே துணையானது . முள்ளந்தண்டு வடம் பாதிக்க பட்ட குழைந்தையானார் .ஆண்டு ஒன்றுக்கு சென்று படிக்கவேண்டும் என்ற கனவோடு இருந்த குழந்தைக்கு சிங்களம் கொடுத்த பரிசு சக்கர நாற்காலி , ஆண்டு ஒன்று படிக்காமலேயே சொந்த ஊரில் மீழ்குடியேறி ஆண்டு இரண்டிலிருந்து கற்க ஆரம்பித்த விதுர்சிகா இன்று சாதித்திருக்கிறார் . இன்னும் சாதிக்க இருக்கிறார் . இவரின் அண்ணன் மொரட்டுவ பல்கலை கழகத்தின் பொறியியல் பீட மாணவன் .

இந்த குழந்தையை தவறுதலாகவேனும் சுட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வுகூட இல்லாது இலங்கை அரசோ அரச படைகளோ போர் முடிந்து 11 வருடங்கள் கடக்கின்ற நிலையில் சிறு துளியேனும் இழப்பீடு கூட கொடுக்கவில்லை நீதிகூட பெற்றுக்கொடுக்கவில்லை .

ஆனால் இவள் போன்ற எம் தேசத்தின் குழந்தைகள் சாதித்து கொண்டுதான் இருக்கின்றார்கள் . நீங்கள் வலிகள் தந்தாலும் நாங்கள் அவற்றை அறுவடை செய்வோம் எதிர்காலத்தின் வளமாக , அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எம்மினத்தின் அழியாத நம்பிக்கை இந்த குழந்தை

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com