புற்கள் நிறைந்த சிட்னி ஆடுகளத்தில் ஆஸியை சமாளிக்குமா இந்திய அணி!

வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான சிட்னி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த ஆட்டம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலிரு ஆட்டங்களும் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி தொடரை இழக்கும் நிலையில் இருந்து தப்பிக்கும். இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் வெற்றிபெறும் நம்பிக்கையை இரு அணிகளும் வெளிப்படுத்தியுள்ளன.

காயத்தால் அவதிப்பட்ட ஆஸ்திரேலிய ஆரம்ப வீரர் வோர்ணர் நாளை மீண்டும் களமிறங்குகின்றார். அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் பேட்டின்சன் காயமடைந்துள்ளார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் சைனி நாளை அறிமுகமாகும் அதேவேளை காயத்தால் ஓய்வில் இருந்த ரோகித் அணிக்குத் திரும்பியுள்ளார்.