சுவரில் மோதி விபத்திற்குள்ளான சிறிலங்கா கடற்கடையினரின் பேருந்து: ஐவர் காயம்

சிறிலங்கா கடற்படை சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 கடற்படை சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி-கொழும்பு பிரதான வீதியில் பயணித்து்கொண்டிருந்த குறித்த பேருந்து அம்பலாங்கொடை-ரன்தொபே குதியில் வைத்து வீதியிலிருந்து விலகி அருகில் இருந்த சுவரொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடமபெற்ற மேற்படி விபத்தில், கடற்படை தலைமையகத்திற்கு சென்றுக்கொண்டிருந்த கடற்படை சிப்பாய்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாரம்மல-குளியாபிடிய பிரதான வீதியில் கடஹபொல-கல்வங்குவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காவல்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி காவல்துறை அதிகாரி பயணித்த உந்துருளியானது எதிர் திசையிலிருந்து வருகைத்தந்த கெப் ரக வாகனத்துடன் மோதுண்டதன் காரணமாகவே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com