லண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்

பிரித்தானியாவில் தமிழ்க் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட மோதலையடுத்து கொலையும் தற்கொலை முயற்சியும் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் நடந்த பிள்ளைகள் கொலை சம்பவத்தில், நான் எந்த ஒரு வாய் தர்கத்திலும் ஈடுபடவில்லை என்று பிள்ளைகளின் தாய் நிஷா தெரிவித்துள்ளார்

லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என அறியப்படும் நிதின்குமார் என்பவர் பிரித்தானியா இல்ஃபோர்ட் பகுதியில் வசித்து வந்தவர்.

ஞாயிறன்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து பொலிசார் சுமார் 5.30 மணியளவில் சம்பவப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

நிதின்குமார், நிஷா இவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் 2014-ல் திருமணம் செய்து கொண்டனர். மற்றும் உள்ளூர் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்கள்.

நிதின்குமார் தமது குடியிருப்பின் அருகாமையில் அமைந்துள்ள 54 வயதான சண்முகதேவதுரை என்பவரது கடையிலேயே பணியாற்றி வந்துள்ளார்.

நிதின்குமார் தொடர்பில் சண்முகதேவதுரை தெரிவிக்கையில், நிதி ஒரு அற்புதமான மனிதர், விசுவாசமான தொழிலாளி. அவர் காலை 9 மணிக்கு கடையைத் திறந்தார், ஒரு சாதாரண நாள் வேலை செய்தார், அவர் புறப்படுவதற்கு சற்று முன்பு எனக்கு தேநீர் கொடுத்தார்.

ஊரடங்கு நாட்களில் வேலைக்கு செல்வது தமது மனைவிக்கு பிடிக்கவில்லை என்று நிதி கூறி வந்ததாகவும் சண்முகதேவதுரை குறிப்பிட்டுள்ளார்.மிருகத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து நிஷா தெருவுக்கு வந்து உதவி கோரியதை நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

update

இதேவேளை குளியல் அறையின் கதவை திறந்துகொண்டு வெளியே வந்த கணவர்(நிதின்) கழுத்தில் காயம் இருந்ததாகவும். அவர் தன்னை தானே கழுத்தில் வெட்டி இருந்ததாகவும் நிஷா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திக்கொண்டு வெளியே ஓடி வந்து, யாராவது உதவி செய்யுங்கள் என்று கத்தி அழுதுள்ளார். இது இவ்வாறு இருக்க மகனை மட்டும் தான் தனது கணவர் கழுத்தில் வெட்டி உள்ளார். படுக்கையில் உறங்கிக் கொண்டு இருந்த தனது ஒரு வயது மகளுக்கு எதுவும் நடக்கவில்லை என்று நிஷா எண்ணி இருக்கிறார்.

ஆனால் பின்னர் உள்ளே சென்றவேளை தான், மகளையும் தனது கணவர் கத்தியால் ஏற்கனவே குத்தி கொன்று விட்ட விடையம் அவருக்கு தெரிய வந்துள்ளது. மகன் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தவேளை மகன் கழுத்தில் நிஷா ஐஸ் கட்டிகளை வைத்து ரத்தத்தை உறையவைக்க முயற்ச்சி செய்துள்ளார். ஆனால் அங்கே தனது கழுத்தை வெடிக்கொண்டு வந்த கணவர், தனக்கு பெரிய பிரச்சனை ஒன்று வர உள்ளது என்றும். இனி நான் என் பிள்ளைகளை பார்க முடியாத நிலை தோன்றலாம் என்று, தான் இப்படி செய்தேன் என்று கூறி நிலத்தில் விழுந்து விட்டார் என்று மனைவி(நிஷா) தெரிவித்துள்ளார். தன்னை மன்னித்து விடுமாறும் அவர் கூறியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com