195 ஓட்டங்களுடன் சுருண்டது அவுஸ்; புரட்டியெடுக்குமா இந்தியா ?

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று (26) மெல்பேர்னில் ஆரம்பமாகியது.

போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 72.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் அஸ்வின் (35/3) விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இந்திய அணி, இன்றைய ஆட்ட நாள் நிறைவில் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.