உயிர்தப்பிய முன்னாள் எம்பி முஸ்தாபா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா மற்றும் அவரது மகள் ஆகியோர் பயணித்த கார் மட்டக்களப்பு – அரசடி பகுதியில் இன்று (27) காலை மதில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவரும் காயமின்றி தப்பியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com