ஆயிரம் சடலப் பைகள் விவகாரம்; முற்றாக மறுக்கிறது அரசு!

ஐசிஆர்சியிடம் ஆயிரம் சடலப் பைகள் (Body Bags) கோரப்பட்டது, கொரோனாவினால் அதிகளவு மரணம் ஏற்படும் என்பதாலல்ல என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் அதிக மரணங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.

சுகாதார அமைச்சு எப்போதும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சடலப் பைகள் உட்பட குறிப்பிட்ட அளவிலான மருத்துவ பொருட்களை தேக்கி வைத்திருக்கும. இது ஒரு கட்டாய தேவை.

அதே போல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குறித்த ஆயிரம் சடலப் பைகள் கோரப்பட்டுள்ளன

எந்தவொரு பேரழிவு மற்றும் பிற மோசமான நிலைமையினால் இறப்பவர்களின் உடல்களை சடலப் பைகளில் வைப்பது நீண்டகால நடைமுறையாகும். அது தனியே கொரோனாவுக்கு மட்டுமானதல்ல.

உதாரணமாக கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது இறந்தவர்களின் உடல்கள் சடலப் பைகளில் வைக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பின்பற்றப்படும் நடைமுறை ஆகும்.

எனவே இந்த கோரிக்கை தொடர்பில் மக்கள் அச்சப்படவோ, சந்தேகங்களை ஏற்படுத்தி கொள்ளவோ தேவையில்லை – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com