
வவுனியா – கூமாங்குளத்தில் மான் மற்றும் பண்டி இறைச்சியினை உடமையில் மறைத்து வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பிராந்திய போ தை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்றைய தினம் கூமாங்குளம் பகுதியில் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ காட்டுபன்றி மற்றும் 10 கிலோ மான் இறைச்சியை மீட்டுள்ளனர்.
அதனை உடமையில் மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.