
வீதியில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு
யாழ் ஆனைப்பந்தி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயம் முன்பாக உள்ள வீதியில் இருந்து இன்று (26) மாலை ஆறு மணியளவில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தம்பு வாமதேவன்(69) ஜின்னா வீதி, யாழ்ப்பாணம் எனும் முதியவரே சடலமாக மீட்கப்பட்டு சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ் மரணம் குறித்து யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.