
நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் செவ்வாய் (28) காலை 5 மணி வரை தொடரும் என்று இன்று (26) சற்றுமுன் அரசு அறிவித்துள்ளது.
விடுமுறையில் உள்ள முப்படையினர் தமது முகாங்களுக்கு திரும்ப உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா அபாயமற்ற 21 மாவட்டங்களில் நாளை (27) ஊரடங்கு தளர்த்தப்படவிருந்தது.