
தேசிய அடையாள அட்டை இலக்கங்களின் அடிப்படையில் மக்கள் வெளியில் செல்வது ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் தான் பிரதானமாக அமுலாகும். ஊரடங்கு தளர்வின் போது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே அடையாள அட்டை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன விளக்கமளித்துள்ளார். மேலும்,
ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மிக அத்தியாவசியமாயின் அந்தப் பகுதியில் மருந்தகம் வீடுகளுக்கு அருகே திறந்து இருக்குமாயின், குறித்த அடையாள அட்டை முறைமையை பின்பற்ற முடியும்.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் இந்த முறைமை பின்பற்றப்படுவதே இலக்கு. – என்றும் தெரிவித்துள்ளார்.