இராணுவ கப்டனுக்கு கொரோனா; 150 பேருடன் சீதுவ முகாம் முடக்கம்!

நீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.

குறித்த கப்டனின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையிலேயே இவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுடன் இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் அதனை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com