இஸ்வதினி நாட்டின் பிரதமர் கொரோனாவால் மரணம்!

தெற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஸ்வாஸ்லாந்து என்று அழைக்கப்பட்ட இஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ரோஸ் டிலாமினி (52-வயது) நேற்று கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார்.

உலகில் கொரோனா தொற்றால் மரணமடைந்த முதலாவது அரச தலைவர் இவரே.

2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமராக தெரிவான இவர், கடந்த நவம்பர் 15ம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (13) மரணமடைந்துள்ளார்

இதனையடுத்து அந்நாட்டின் பதில் பிரதமராக தெம்பா என். மசுகு நியமிக்கப்பட்டுள்ளார்.