தென் சூடான் பறந்தது விமானப்படையின் 2ம் அணி!!!

தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இணைந்து கொள்ளவுள்ள இலங்கை விமானப்படையின் 2வது குழுவினர் நாட்டிலிருந்து இன்று பயணமானார்கள்.

விமானப் படையைச் சேர்ந்த 52 பேரும் இன்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தென்சூடான் நோக்கி பயணமாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.