தனது சொந்த ஹொட்டலில் இறந்து கிடந்த சுவிஸ் நாட்டவர்!

சுவிஸ் ஹொட்டல் அதிபர் ஒருவர் தனது சொந்த ஹொட்டலில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்த நிலையில், பொலிசார் குத்துச்சண்டை வீராங்கனையான அவரது மனைவியை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுவிஸ் ஹொட்டல் அதிபரான Thomas (61)க்கும் பிரேசில் நாட்டவரான Viviane Obenauf (34) என்பவருக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திருமணம் ஆன நிலையில், Thomas தனது சொந்த ஹொட்டலிலேயே கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதற்கிடையில், Vivianeஐ அறிந்தவர்கள், அவர் பயங்கர கோபக்காரர் என்றும், கோபம் வந்தால் ஆண் பெண் என்று பாராமல் தாக்குவார் என்றும் கூறியுள்ளார்கள்.

அத்துடன், லண்டனிலுள்ள இரவு விடுதி ஒன்றில் Viviane தனது 30ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும்போது, ஒருவர் அவரது பின்பக்கங்களை வேண்டுமென்றே தொட முயன்றதற்காக, அவரை முகத்தில் குத்தி காயப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆகவே, பொலிசார் Vivianeஐ சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். Viviane கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். Viviane தான் போட்டியிட்ட 20 போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றி பெற்றகுத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.